ETV Bharat / city

வனப்பகுதிகளை சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரி வழக்கு!

மதுரை: வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சோதனைச் சாவடி, அதிகாரி அலுவலகம், குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

cctv
cctv
author img

By

Published : Feb 13, 2021, 7:10 PM IST

மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என 7,072 கி.மீ பரப்பளவு உள்ளது. இதில் 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரினப் பூங்காக்கள், மேலும் ஆனைமலை, களக்காடு, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் உள்ளன. இங்கு மிகவும் அரிதான தாவரங்கள், பறவைகள், கால்நடைகள், மீன் வகைகள் உள்ளன.

இவற்றை பாதுகாக்க வனவிலங்கு பாதுகாப்புச் சட்டதின் கீழ் சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் சோதனைச் சாவடிகள் அமைத்தும் கண்காணிக்க வேண்டும். இதே போன்று இரவு நேரங்களில் வனப்பகுதிகளை கண்காணிக்கும் வகையில் வனத்துறை சோதனைச் சாவடி, அதிகாரிகள் அலுவலகம், குடியிருப்பு, மலை ஏறும் பகுதி, யானைகள் வசிக்கும் பகுதி மற்றும் சந்தன மரங்கள் உள்ள பகுதி ஆகியவற்றிலும் சிசிடிவி பொருத்த வேண்டும். அவற்றின் பதிவுகளை 18 மாதங்களுக்கு சேமித்து வைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வனத்துறை தரப்பில் வனப்பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி பொருத்தி 2 மாதங்கள் வரை சேமித்து வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: காணாமல்போன ஜிம் மேனேஜர் எலும்பு கூடுகளாக கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.