மதுரை: பாஜக ஆதரவாளராகவும், தேசியவாதியாகவும் அறியப்படும் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் பதிவிட்டதாக வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார்.
மேலும், மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவும் அதில் வலியுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
பாஜகவினர் கைது
இந்நிலையில், மாரிதாஸை கைதுசெய்ய காவல் துறையினர் சென்றபோது, அவர்களைத் தடுத்ததாகவும், கூட்டத்தைக் கூட்டி கரோனா தொற்றுப் பரவலுக்கு வழிவகுத்ததாகவும் கூறி மதுரை மாநகர் பாஜக தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மருத்துவர் சரவணன் உள்ளிட்ட பாஜகவினர் 50 பேர் மீது ஆறு பிரிவுகளின்கீழ் திருப்பாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவை விமர்சித்து ட்விட்டர் பதிவு: யூ-ட்யூபர் மாரிதாஸ் கைது