ETV Bharat / city

Video: மேடை நிகழ்ச்சியின்போது பரதநாட்டியக் கலைஞருக்கு மாரடைப்பு: மகள் கண்முன்னே நடந்த துயரம் - திகைத்துப்போன மக்கள் - மகள் கண்முன்னே நடந்த துயரம்

மதுரை அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியின்போது, மாரடைப்பு ஏற்பட்டு பரதநாட்டிய கலைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேடை நிகழ்ச்சியின்போது பரதநாட்டிய கலைஞருக்கு மாரடைப்பு

author img

By

Published : Mar 25, 2022, 4:43 PM IST

மதுரை: பங்குனித்திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் எனப் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் பூச்சொரிதல் விழாவில் பரதநாட்டிய கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எல்லாம் வல்ல தாயே என்ற பாடலுக்கு, தனது மகனுடன் ஆடுவது போன்று, தனது மகள் மற்றும் பரத மாணவர்களுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவருக்கு ஏதோ நிகழப்போவது என்று உணர்ந்த அவர் ஓரமாக போய் நின்று, தண்ணீர் வேண்டுமென கேட்டார். பின்னர் தண்ணீரை குடித்துவிட்டு தனது சட்டை பொத்தானைக் கழற்றிவிட்டு, நெஞ்சில் கை வைத்தவாறே சேரில் அமர்ந்தார். மாணவர்களின் நடனத்தை ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்ததால் இவரை யாரும் கவனிக்கவில்லை என்பது போல் தெரிகிறது.

மேடை நிகழ்ச்சியின்போது பரதநாட்டியக் கலைஞருக்கு மாரடைப்பு

இதனையடுத்து நடனமாடிக்கொண்டிருந்த மாணவிகள் அந்தப்பாடல் முடியும் வரை, நடனம் ஆடிவிட்டு கலைஞர் காளிதாஸ் அருகில் வந்தனர். எந்த ஒரு அசைவும் இல்லாமல், நெஞ்சில் கைவைத்து சாய்ந்த நிலையிலிருந்த அவரை அவரது மகள் "அப்பா..அப்பா" என்று எழுப்ப அவரது தலை சாய்ந்தது.

மகளின் கண்முன்னே அப்பா இறந்த துயரம்

பின்னர் அங்கு இருந்தவர்கள் அவர் அருகில் வந்து பார்த்த பொழுது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதைப் பார்த்த அவரது மகள் கதறி அழ, நடனக்கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியைக் காண வந்த அனைவரும் கண்ணீர் பெருக்குடன் திகைத்து போய் நின்றனர். உடனே இதுகுறித்து ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்து, அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்றினர்.

இறந்த பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸுக்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அவர் சிறு வயது முதல் பரதநாட்டியம் ஆடி வருகிறார். பரத நாட்டியப் பள்ளியும் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மிருதங்க வித்துவான், மகள் பரதக்கலைஞர், மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை என கலைக்காக வாழ்ந்த குடும்பம் என காளிதாஸின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆடல் வல்லான், மதிப்புறு முனைவர் போன்ற பட்டங்களையும் 1000-க்கும் மேற்பட்ட சீல்டு, பதக்கங்களை இவர் பெற்றிருக்கிறார். புகழ்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது, இவரது உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியைக்காண வந்த பக்தர்களுக்கு மட்டுமில்லாமல், கலைத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.