பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகம்மது கம்யூல் இஸ்லாம், தன்வீர் ரய்ஹான், மோனிர் ஹசன், சுலைமான், அப்துல் ஹெல்யூ உள்ளிட்ட 11 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், "கரோனா ஊரடங்கு காலத்தில் முறையான அனுமதியின்றி, திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் தங்கியிருந்ததாக திண்டுக்கல் டவுன் தெற்கு காவல்துறையினர் எங்களை கைது செய்தனர். முறையான விசாவின் மூலம் திண்டுக்கல் பகுதிக்கு, மார்ச் 13 முதல் 19 வரை வருவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். எனவே, எங்களுக்கு பிணை வழங்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் அவகாசம் கேட்டதால் மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.