ETV Bharat / city

வேளாண் உற்பத்தி, விளைபொருள் ஒப்பந்த சட்டத்திற்கு தடை கோரி வழக்கு: வேளாண்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு! - மதுரை நீதிமன்ற செய்திகள்

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019 அமல்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில் வேளாண்துறை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jan 18, 2021, 6:48 PM IST

மதுரை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணை மற்றும் சேவைச் சட்டம்-2019 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

ஒரு விவசாயி நேரடியாக தனியார் ஒப்பந்ததாரருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதற்காக ஒப்பந்ததாரர் விரும்பிய இடத்தில் முகாம் அமைத்து அவர்களது விலைக்கு கொள்முதல் செய்ய முடியும். அதே நேரத்தில் விவசாயத்தின் போது ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்த முடியாது.

விவசாய ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நேரடியாக நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. இதற்கென அமைக்கப்பட்ட வருவாய் கோட்ட குழுவின் மூலமே தீர்வு காண முடியும். இதை எதிர்த்து மாவட்ட அளவிலான குழுவில் தான் முறையீடு செய்ய முடியும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்த சட்டம் 2019 அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். அந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜீ, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கு குறித்து வேளாண்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பூரணமதுவிலக்கு கோரிய மனு: உரிய அலுவலர்களுக்கு மனு அளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.