ETV Bharat / city

'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் மனுதாரர்'- நீதிமன்றம் உத்தரவு

அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரை விழாக் குழுவில் சேர்க்க உத்தரவிட்டு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு விசாரணையை முடித்துவைத்தது.

avaniyapuram jallikkattu issue in madurai hc bench, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, avaniyapuram jallikkattu, latest court news, madurai court news, மதுரை நீதிமன்ற செய்திகள், நீதிமன்ற செய்திகள்
avaniyapuram jallikkattu issue in madurai hc bench
author img

By

Published : Jan 7, 2021, 2:23 PM IST

மதுரை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல்நாள் நடைபெறும். தற்போது சிறப்பு சட்டவரைவு காரணமாக ஜல்லிக்கட்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் விழா குழுவானது அமைக்கப்படவில்லை.

அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவை அமைக்க வேண்டும். 2019ஆம் ஆண்டும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து விழாக் குழு அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.

ஆனால் ஒருசில அங்கீகரிக்கப்படாத குழுவினர் மட்டும் விழா குழுவினர் அங்கத்தினராக உள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலரிடம் மனு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆகவே அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெறவேண்டும் என்பதே நோக்கம். எனவே மனுதாரரை விழாக் குழுவில் மனுதாரரை இணைக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.