ETV Bharat / state

இந்திய அரசியலமைப்பு தினம்: பள்ளி, கல்லூரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசியலமைப்புச் தினம் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாப்படும் நிலையில் அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் அரசிலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு சட்டப் புத்தகம், முதலமைச்சர் ஸ்டாலின்
அரசியலமைப்பு சட்டப் புத்தகம், முதலமைச்சர் ஸ்டாலின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 4:17 PM IST

சென்னை: இந்திய அரசியலமைப்புச் தினம் ஒவ்வராண்டும் நவம்பர் 26ஆம் தேதி கொண்டாப்படும் நிலையில் இந்த ஆண்டு நாம் 75ஆம் ஆண்டுகுள் அடியெடுத்து வைக்கபோகிறோம். இதை கொண்டாடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியாதவது, “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கியது இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்தியாவை வளமான பாதையில் வழிநடத்துவது அரசியலமைப்பு சட்டம். இவ்வாறு உன்னதமான அரசியல் அமைப்பை உருவாக்கியவர், சட்ட மேதை அம்பேத்கர்.

இந்தியர்களாகிய நம்ம இயக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும். எனவே அனைவரும் இது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு வரி தொடர்பாக முக்கிய அறிவிப்பு - அமைச்சர் ஆர்.காந்தி

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது” என அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.