ETV Bharat / entertainment

"அரசியல் சரிபட்டு வராது என துணிந்து முடிவெடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன்" - நூற்றாண்டு விழாவில் ரஜினி புகழாரம்!

அரசியல் தனக்கு சரிபட்டு வராது என துணிந்து முடிவெடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன் என்று அவரது நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

ஜானகி ராம்சந்திரன் போஸ்டர், ரஜினிகாந்த்
ஜானகி ராம்சந்திரன் போஸ்டர், ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழா சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் அவர் வழங்கினார். அதன்பிறகு, ஜானகியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் காணொளி வாயிலாக ஜானகி நூற்றாண்டு விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அந்த காணொளியில், "எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இக்கட்டான சுழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார்.

இதையும் படிங்க : "எடப்பாடிக்கு உள்ள தகுதி எனக்கு கிடையாது" - உதயநிதி ஸ்டாலின் சூசகம்!

ஜானகி மிகுந்த தைரியத்துடன் இருப்பவர், தைரியமாக முடிவெடுப்பவர். அதனால் தான் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும், நீங்கள் தான் சரியானவர் என்றும் முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய குணமாகும். ஜானகியை நான் 3 முறை சந்திதுள்ளேன். அவர் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.

ராமாபுரம் எம்ஜிஆர் ஜானகி வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். தினமும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வார்கள். இது அனைத்தும் ஜானகியின் மேற்பார்வையில் தான் நடக்கும். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடுவதை நான் வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.