ஐதராபாத்: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஏலத்தில் கேப்டு பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் ஏலம் போயினர். முதல் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய் தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் கார்டு மூலம் தக்கவைத்துக் கொண்டது.
தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடாவை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்திற்கு எடுத்தது. இந்நிலையில், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரை விலைக்கு வாங்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்! #etvbharat #etvbharattamil #iplmegaauction #IPLAuction #IPLAuction2025 #IPL2025 pic.twitter.com/bOgw8TamTh
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) November 24, 2024
மாறி மாறி இருவரும் ஸ்ரேயாஸ் ஐயரை தங்கள் பக்கம் இழுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் ஏலம் அனல் பறந்தது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருந்த நிலையில், அதையும் தாண்டி ஸ்ரேயாஸ் ஐயர் ஏலம் கேட்கப்பட்டார்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக தொகைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயரை தங்கள் பக்கம் இழுப்பதில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் கடும் போட்டியில் ஈடுபட்டன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றி மிக அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து இருந்ததே அதிகபட்ச தொகையாக இருந்தது.
தற்போது அதையும் தாண்டி ஸ்ரேயாஸ் ஐயர் புது சாதனை படைத்துள்ளார். மொத்தம் 26.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கிரிக்கெட் புது வரலாறு படைத்துள்ளார்.
இதையும் படிங்க: IPL 2025 Auction Live: சரித்திரம் படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!