ETV Bharat / city

மழைய மரம் விழுந்த ஆட்டோ சேதம் - சிசிடிவி வெளியீடு

author img

By

Published : Nov 8, 2021, 11:00 AM IST

மதுரையில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரம் விழுந்ததில் அங்கிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நசுங்கிச் சேதமடைந்தன.

மரம் விழும் சிசிடிவி காடி
மரம் விழும் சிசிடிவி காடி

மதுரை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாகக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக மதுரை சிம்மக்கல், கோரிப்பாளையம், அரசரடி, மாப்பாளையம், பெரியார், தமுக்கம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. மதுரை மெட்ஜூரா கோட்ஸ் ஒட்டியுள்ள முத்து மேம்பாலத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த பழமையான ராட்சத அரசமரம் திடீரென நேற்று (நவ.07) முறிந்து விழுந்தது.

மரம் விழும் சிசிடிவி காடி

எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ நசுங்கியதோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன.

நல்வாய்ப்பாக மரம் விழுந்தபோது யாரும் வாகனத்தில் செல்லாததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்ணீரில் மிதக்கும் சென்னை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.