மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கையும் களவுமாக சிக்கிய நபர்
அதன்பேரில் சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.
பின்னர் கையும் களவுமாக சிக்கிய கார்த்திக்கை கைது செய்த பெருங்குடி காவல் துறையினர், சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருள்களையும் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.