ETV Bharat / city

இலங்கையிலிருந்து அகதியாக வந்த மூதாட்டி உயிரிழப்பு - சட்ட விரோதமாக வருகை தந்த இலங்கை அகதி சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக வந்த மூதாட்டி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இலங்கை அகதி
இலங்கை அகதி
author img

By

Published : Jul 3, 2022, 10:06 AM IST

மதுரை: இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து பலர் சட்ட விரோதமாக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில், தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் மணல் திட்டில் ஜூன் 27ஆம் தேதி இரண்டு இலங்கை தமிழர்கள் மயக்க நிலையில் மீட்கப்பட்டனர்.

இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இருவரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி(70), பெரியண்ணன் (எ) சிவன்(80) என்பதும் தோணி மூலம் தனுஷ்கோடி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் பரமேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 3) உயிரிழந்தார். சிவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: இலங்கை செல்ல விசாவுக்கு விண்ணப்பித்த பெண்ணிடம் கடுமையாக நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரிகள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.