மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மாநகராட்சி அலுவலர்களுடன் இன்று
1. திருமலை நாயகர் மஹால் சுற்றுப்புறங்கள்
2. விளக்குத்தூன், பத்துத்தூண் சுற்றுப்புறங்கள்
3. ஜான்சி ராணி பூங்கா (பாரம்பரிய பஜார் உருவாக்க பகுதி)
4. நான்கு சித்திரை வீதி
5. குன்னத்தூர் சத்திரம்(புதுமண்டப கடைகள் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றும் பகுதி)
6. தெற்கு - மேல மாசி வீதி௧ள் உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மதுரை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், தூசிகள் காரணமாகவும் காற்று மாசு சென்னையை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட் சிட்டி பணிகள். அதனால் மக்களும் பெரும் அவதிக்குகாளாகி வருகின்றனர்.
இதுபோன்ற வளர்ச்சி பணிகள் நடைபெறும் போது மக்களுக்கு சிரமம் ஏற்படுவது இயல்புதான் என்றாலும் அதனை குறைப்பதற்கு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் மார்ச் மாதத்திற்குள் பெரியார் பேருந்து நிலையப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்திற்கு திறந்து விடப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காற்று மாசுபாட்டிற்கும் அகால மரணங்களுக்கும் காரணமானவர்களை நெருங்குமா அரசு?