ETV Bharat / city

தெலங்கானாவில் ரூ.5 கோடி மோசடி: அ.இ.மூ.மு.க. பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவர் கைது

தெலங்கானா மருத்துவனை உரிமையாளரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவரை தெலங்கானா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவர்
பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவர்
author img

By

Published : Sep 1, 2021, 12:06 PM IST

தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் என்ற லட்சுமி நாராயணன். இவர், காமி நேனி எனும் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

இவரிடம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். தேவர் 2011ஆம் ஆண்டு, கடன் பெற்றுத் தருவதாக கூறி 5 கோடி ரூபாய் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தெலங்கானா காவல் நிலையத்தில் புகார்

எஸ்.ஆர். தேவர், ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவராகவும், கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திருச்சுழி தொகுதியில் தற்போதைய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எதிர்த்து அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்.

இந்நிலையில், லட்சுமி நாராயணனிடம் பணம் பெற்றுக்கொண்ட அவர், லோன் எதுவும் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், லட்சுமி நாராயணன் இது குறித்து தெலங்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர்.

எஸ்.ஆர். தேவர் கைது

பின்னர், தெலங்கானா காவல் துறையினர், குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.ஆர். தேவரை கைது செய்வதற்காக காரைக்குடியிலுள்ள அவரது வீட்டிற்கு விரைந்தனர்.

அங்கு, காரைக்குடி வடக்கு காவல் துறையினரின் உதவியுடன் எஸ்.ஆர். தேவரை கைது செய்து காரைக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தி மேல் விசாரணைக்காக தெலங்கானா அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய எஸ்.ஆர். தேவர், “புகார்தாரருக்கு ஏற்கனவே பணம் திருப்பி கொடுக்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இது தவறான புகார் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தலைமை ஆசிரியரை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.