ETV Bharat / city

அமைச்சர் மிரட்டுகிறார்: நீதிமன்றத்தில் கதறி அழுத நிர்மலா தேவி.! - அதிமுக அமைச்சர் நிர்மலா தேவிக்கு மிரட்டல்

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் கதறி அழதபடி வெளியேறினார். அப்போது ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக அவரின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

AIADMK minister threatened: Nirmala weeping in court
author img

By

Published : Nov 25, 2019, 7:14 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு நீதிமன்ற பிணை கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்த நீதிபதி அவருக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்தார். இதனால் சிபிசிஐடி காவலர்கள் நிர்மலா தேவியை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த நிர்மலா தேவி கதறி அழுதபடி வெளியே வந்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன், நிர்மலா தேவியை ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டுவதாக தெரிவித்தார்.

பேராசிரியை நிர்மலா தேவி வழக்குரைஞர் பேட்டி.!

அந்த அமைச்சர் பாதி நாட்கள் சாமியார் போலவும், மீதி நாட்கள் சாதாரணமாகவும் இருப்பவர் என்றும் மறைமுகமாக நிர்மலா தேவியின் வழக்குரைஞர் கூறினார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிர்மலா தேவியை நான் அழைத்து வந்த போது, காவலர்கள் கைது செய்து விட்டனர் என்றும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதையும் படிங்க : பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

Intro:விருதுநகர்
25-11-19

பேராசிரியை நிர்மலா தேவி மீது ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக கூறி மதுரையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் மிரட்டுவதாக அமைச்சர் மீது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு

Tn_vnr_05_nirmala_devi_issue_vis_script_7204885Body:கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவி மீது ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக கூறி மதுரையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் மிரட்டுவதாக அமைச்சர் மீது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு.,,,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி கடந்த 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய ஜாமினை ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் உயர்நீதிமன்ற நீதிபதி பரிமளா நிர்மலாதேவியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.‌ பின்பு நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர்,
தனது கட்சிக்காரரை ஒரு கடத்தல்காரர் போல் சிபிசிஐடி போலீசார் மறைத்து ஆஜர்படுத்திய தாகவும், நேற்று இரவு தன்னிடம் பேசிய நிர்மலா தேவியை தான் இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி முன்பு சரணடையுங்கள் என்று கூறிய நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் அவரை நீதிமன்றத்திற்கு வரும்போதே கைது செய்து அழைத்து வந்தது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் நிர்மலாதேவி தன்னிடம் மதுரையைச் சேர்ந்த ஒரு அமைச்சர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆனால் தனது குடும்பத்தை சீரழித்து விடுவதாகவும் தனது குழந்தைகளை கடத்திவிடுவதாகவும் மேலும் தன்மீது ஆசிட் ஊத்தி கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று ஆஜராக வந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எடுப்பதாக கூறினார் மதுரையை சேர்ந்த அமைச்சர் குறித்து கேட்டபோது அந்த அமைச்சர் வருடத்தில் பாதிநாள் தாடி வைத்து சாமியாராக இருப்பதாகவும் மீதி நாள் சாதாரணமாக இருப்பதாகவும் பரபப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். குறிப்பாக இன்று சிபிசிஐடியால் அழைத்துவரப்பட்ட நிர்மலாதேவி நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும்போது அழுது கொண்டே சென்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.