வெங்கடேஷ்வரன்
மதுரை
16.04.2019
*பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அதற்காக விரைவான தண்டனை கிடைக்கவும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் இடை வெளியில் தெரியாதபடி பாராளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்தப்படும். என மதுரையில் இறுதி கட்ட பிரச்சாரமாக பொதுமக்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் பதில் ..*
மதுரை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மதுரையில் உள்ள பொழுதுபோக்கு வணிக அரங்கில் (விஷால் டி மாலில்) பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் *" ஓபன் மைக் என்ற நிகழ்ச்சி மூலம்"* கலந்துரையாடல் செய்தார்...
அப்போது பேசிய ராஜ்சத்யன்...
மதுரையை புதுமையாகவும், இளைஞர்களுக்கான நகரமாக மாற்ற தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்...
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்..
வளர்ந்து வரும் நகரில் குடிநீர் தேவைக்கு அம்ருத் திட்டம் மூலம் 24 மணி நேரம் தண்ணீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் 1 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்...
கேள்வி .. பொள்ளச்சி சம்பவத்தைப் போல இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது, அதனை தடுக்க நடவடிக்கை ..
வேட்பாளர் :- பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அதற்காக விரைவான தண்டனை கிடைக்கவும் மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் இடை வெளியில் தெரியாதபடி பாராளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்தப்படும்.
கேள்வி சிறுபான்மையினருக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்...
பதில் :- அதிமுக சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், காவலராகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது, நாங்கள் கூட்டணி அமைத்துள்ள பாஜக தான் அப்துல் கலாமை 5 வருடமாக குடியரசு தலைவராக வைத்திருந்தது, தற்போது சிறுபான்மையினருக்கான குற்றங்கள் பெருமளவில் குறைந்து உள்ளன அவர்களுக்கான இந்நிலையில் மீண்டும் மீண்டும் தேவையான பாதுகாப்புகளும் உரிமைகளும் வழங்கப்பட்டு வரும்...
கேள்வி :- தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய மழை நீர் சேகரிப்புத் திட்டம் தற்போது செயல்பட என்னா நடவடிக்கை எடுக்கப்படும்...
பதில் - கேள்விக்கு வாழ்த்துக்கள், மதுரையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்...
கேள்வி :- படித்த இளைஞர்களுக்காக மதுரையில் வேலைவாய்ப்புக்கான நடவடிக்கை என்னா...?
பதில் :- மதுரையில் அனைத்து ஐடி நிறுவனங்களையும் , அழைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்..
கேள்வி :- சென்னையில் உள்ளது போல மதுரையிலும் சினிமா துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா...?
பதில் : இதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, சாத்தியம் இருப்பின் சினிமா துறைக்கான அமைப்புகள் அமைக்கப்படும். என அப்போது தெரிவித்தார்,.
Visual send in mojo kit
Visual name : TN_MDU_02_16_ADMK RAJ SATHIYAN BYTE_TN10003