மதுரை: ஆனையூர் அருகே எஸ்விபி நகர், பியர்ல் ரெசிடன்சி 3ஆவது குறுக்குதெரு பகுதியில் சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி, இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு (அக். 8) பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையிலும், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன், அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் தூங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
நள்ளிரவில், வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடிரென மின் கசிவு ஏற்பட்டு புகை உருவாகியுள்ளது. இதனால், அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்றள்ளனர். தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியதால், இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்து தீ பற்றி எரிந்த நிலையில் சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து தீயை அணைத்து உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு காவியா, கார்த்திகேயன் என இரு குழந்தைகள் உள்ளனர்.