ETV Bharat / city

ஆண்டிபட்டி மதுக்கடையை அகற்றக் கோரிய வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - aandipatti tasmac ban case

மதுரை: ஆண்டிபட்டி மதுக்கடையை அகற்றக் கோரிய வழக்கில், தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

madurai high court
madurai high court
author img

By

Published : Aug 7, 2020, 5:01 AM IST

இதுகுறித்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த கோபால் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 'தேனி ஆண்டிபட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் அரசு அலுவலகங்களும் பள்ளி, கல்லூரிகளும், வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. மேலும் தேனியிலிருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையும் வைகை அணைக்குச் செல்லும் சாலையும் இந்த பகுதி வழியே செல்வதால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடனேயே இப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் தற்போது பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்பில் டாஸ்மாக் கடையும், போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் மதுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல ஆகவே அவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடை, மதுக்கூடம் தொடர்பான புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும் டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மதுக்கூடங்களில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், நெகிழி கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? மது அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் விற்கப்படுகிறதா? மேலும், மதுக்கடைகளில் கூட்டத்தை முறைப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி பயன்படுத்தப்படுவது உள்ளிட்டவை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள மதுக்கடையில் திடீர் ஆய்வு செய்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: விவசாயி சந்தேக மரணம் - உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு; மறு உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.