மதுரை பழங்காநத்தம் அருகே தனியார் உடற்பயிற்சி மையம் ஒன்று இயங்கிவருகிறது. இங்கு நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிகாக திறக்கப்பட்ட உடற்பயிற்சி மையம் என்பதால், இளைஞர்கள் இங்கே ஆர்வத்துடன் வருகை புரிகின்றனர்.
இப்புதிய பயிற்சிக் கூடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் இன்று (ஜூன் 7) காலை 8:30 மணியளவில் பயிற்சி மேற்கொள்ள வந்துள்ளார். படிப்படியாக உடற்பயிற்சியை மேற்கொண்டவர் அதிக சுமை உள்ள பளு தூக்கியை தூக்க முயன்றபோது திடீரென சுருண்டு விழுந்து உள்ளார்.
இதனையடுத்து சக பயிற்சி வீரர்கள் விஷ்ணுவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அதிக சுமையின் காரணமாக இளைஞர் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நான் ஜெயிச்சு நாட்டுக்குப்பெருமை சேர்ப்பேன்': 74 வயது அத்லெட்டின் விடாமுயற்சி!