உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான 10 உபகோயில்களின் உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டன.
இதில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, கூடலழகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் ராமசாமி, இக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை தெற்கு, வடக்கு சரக ஆய்வாளர்கள், திருக்கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில், “உண்டியல் திறப்பின் போது வரப்பெற்ற தொகை ரூ.70 லட்சத்து 29 ஆயிரத்து 647 ஆகும். இதுதவிர, பொன் எடை 570 கிராம், பலமாற்று வெள்ளி 620 கிராம், மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 14 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளன” என மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நிலவு, மின்னொளியில் மிதந்த தெப்பம் - கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா!