உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமர் கோயிலுக்கு காணிக்கைகள், தங்கம், வெள்ளி கற்கள், புனித தலங்களின் மண், நீர் அனுப்பப்பட்டு வருகின்றன.
அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து லீகல் ரைசட் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மூலமாக நாகர்கோவிலில் செய்யப்பட்ட 5 அடி உயரம் கொண்ட 613 கிலோ எடையுடைய வெண்கல மணி ரத வாகனத்தில் ஏற்றப்பட்டு நேற்று (செப்.17) ராமர் கோயில் நோக்கி புறப்பட்டது.
அத்துடன் ராமர், சீதை, லட்சுமணர் சிலைகளும் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் அந்த வாகனம் மதுரை கே.கே. நகர் வந்தடைந்தது. அந்த வானத்திற்கு மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த வாகனம் இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாக 21ஆவது நாளில் அயோத்தி சென்றடைய உள்ளது.
இதையும் படிங்க: மோடியின் பிறந்த நாள்: அன்பளிப்பாக 613 கிலோ எடை கொண்ட கோயில் மணி!