மதுரை: மதுரை ரயில் நிலைய முன்புறப்பகுதியில், ஒரு சில பயணிகள் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர். இதனால், அங்கு சுற்றுப்புற சுகாதாரச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், பயணி ஒருவர் சமூக வலைதளம் வாயிலாக புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் மதுரை ரயில்வே நிர்வாகம் உடனடியாக களத்தில் இறங்கியது. அப்போது, ரயில் நிலையப் பகுதியில் சிறுநீர் கழித்த நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து தலா ரூ.300 அபராதம் வசூலிக்கப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை: மதுரை மாநகராட்சியில் பொதுமக்கள் ஒன்றுகூடும் பேருந்து நிலையங்களில், போதிய சிறுநீர் கழிப்பறை வசதிகள் இல்லை. எனவே, வெளியூர் செல்பவர்கள், மதுரை ரயில் நிலையம் முன்பு சிறுநீர் கழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மதுரை மாநகராட்சியில் உள்ள பெரியார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் மற்றும் மதுரை சந்திப்பு ரயில் நிலையம் ஆகியப் பகுதிகளில் இலவச கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சென்னை ஐஐடியில் 30 பேருக்கு கரோனா - சுகதாரத்துறை செயலாளர் மீண்டும் ஆய்வு!'