ETV Bharat / city

மதுரையில் இன்றும் 200ஐ தாண்டிய கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jun 30, 2020, 10:40 PM IST

மதுரை: இன்று ஒரேநாளில் புதிதாக 257 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது.

257 new Covid -19 cases reported in Madurai, total tally rises upto 2557

மதுரையில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் 200க்கும் அதிகமானோர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இன்று புதிதாக 257 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பாதிக்கப்பட்ட அனைவரும் மதுரையில் கரோனா சிறப்புச் சிகிச்சை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மதுரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 557ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் இதுவரை 817 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் சிகிச்சை பலனின்றி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது ஆயிரத்து 708 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தற்போது மதுரை அரசு இராசாசி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிவதால் அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுப்பப்பட்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.