ETV Bharat / city

புலிகள் காப்பகத்தில் மரநாய்க்குட்டி - weasel calf news in sathyamangalam

சத்தியமங்கலம்: புலிகள் காப்பகத்தில் உள்ள வன கால்நடை மையத்தில் அரிய வகை உயிரினமான மரநாய்க்குட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது.

author img

By

Published : Feb 20, 2020, 10:23 PM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வன கால்நடை மையத்தில் அரிய வகை உயிரினமான மரநாய்க்குட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரநாய்க்குட்டியை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, காராச்சிக்கொரை வன கால்நடை மையத்தில் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மரநாய்க்குட்டி

பிறந்த சில மாதங்களே ஆன மரநாய்க்குட்டியை, கால்நடை மைய மருத்துவர்கள், உதவியாளர்கள் பராமரித்து வருகின்றனர். மரங்களில் வாழும் தன்மை உடைய மரநாய்கள், தென்னை மரங்களில் முகாமிட்டு, தென்னை மரங்களில் உள்ள இளநீரை தனது கூரிய பற்களால் துளை போட்டு குடிக்கும் பழக்கம் உடையது. இரவில் மட்டும் இரை தேடும் பழக்கம் உடைய இந்த மரநாய்க்குட்டிகள் எளிதில் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாது.

அரிய வகை உயிரினங்களின் பட்டியலில் உள்ள இந்த மரநாய்க்குட்டிகள், 1972ன் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் வன கால்நடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இந்த மரநாய்க்குட்டி, தனது தாயை பிரிந்ததால் இரை தேடும் வரை வளர்க்கப்பட்டு, பின்னர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:முதுமலை பகுதியில் சுற்றித்திரியும் அரிய வகை கருஞ்சிறுத்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.