நீலகிரி, கேரள வனப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது. அதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கியது.
அதன்படி இன்று(ஜூலை 25) அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 1955ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 27 முறை 100 அடியை எட்டியுள்ளது. தற்போது அதிகப்படியான உபரி நீர் திறந்துவிடப்படுவதால், பவானி ஆற்றங்கரையோரம் வாழும் மக்களுக்கு எரிச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீர் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் முன்கூட்டியே திறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பவானிசாகர் அணை முன் பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்கும் பணியில் தொய்வு