ETV Bharat / city

வீரப்பன்.. விஜய குமார்.. பட்டுக்கூடு.. நடந்தது என்ன? - சந்தன

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநில காவலர்கள், வன அலுவலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன், பட்டுக்கூடு நடவடிக்கையில் சிக்கினார். வீரப்பன் மறைந்தாலும், அவரது மரணத்தின் மீதான சலசலப்பு இன்னமும் ஓயவில்லை.

Veerappan
Veerappan
author img

By

Published : Oct 18, 2021, 12:37 PM IST

Updated : Oct 18, 2021, 3:44 PM IST

ஹைதராபாத் : சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர் வீரப்பன். இவர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில காவலர்களுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தார்.

வீரப்பன் மீது 184 பேரை கொன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் காவலர்கள் மற்றும் வன அலுவலர்கள் ஆவார்கள். இதை மறுக்காத வீரப்பன், ஆம். ஆனால் 184 அல்ல, 120 எனப் பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தபோது கூறினார்.

சந்தன வீரப்பன்

சிறு வயதிலேயே மலையூர் மம்பட்டியான் என்பவரால் ஈர்க்கப்பட்ட வீரப்பன், 1972ஆம் ஆண்டு முதன் முதலில் கைதுசெய்யப்பட்டார். வீரப்பன் மீது 17 வயதிலேயே கொலைக் குற்றச்சாட்டு ஒன்றும் இருந்தது. இந்நிலையில் அவரது வாழ்வு திசைமாறியது.

காட்டுக்குள் யானை தந்தம் மற்றும் சந்தன மரங்களை வெட்டி கடத்தினார். இதை எதிர்த்த வனத்துறை அலுவலர் சிதம்பரம் என்பவரை 1987இல் கடத்திக் கொன்றார். இந்தக் கொலை நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்திய அரசின் கவனம் வீரப்பன் மீது விழுந்தது.

வன அலுவலர் கொலை

தொடர்ந்து அவரை கைது செய்ய அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் வீரப்பன், பண்டில்லாப்பள்ளி ஸ்ரீநிவாஸ் என்ற வன அலுவலரை கொன்றுவிட்டு தப்பினார். அவரை கைது செய்ய முயன்ற காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

இவ்வாறு வீரப்பன் தென்னிந்திய காடுகளில் தனி ராஜ்ஜியம் நடத்திவர இவரை பிடிக்க ஐபிஎஸ் அலுவலர் கி. விஜயகுமார் தலைமையில் அதிரடி படை அமைக்கப்பட்டது. இந்தப் படை வீரப்பனின் நடமாட்டம், செல்வாக்குள்ள கிராமங்கள் என அனைத்தையும் கழுகுபோல் கவனித்துவந்தது. வீரப்பன் எத்தனை மணிக்கு எங்கு செல்வார் என்பது வரை அனைத்து தகவல்களையும் காவலர்கள் திரட்டினார்கள்.

100 உளவாளிகள்

இந்த நிலையில் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, சேதுமணி ஆகியோர் 2004, அக்.18 சுட்டு வீழ்த்தப்பட்டனர். காவல் துறை தரப்பிலும் 4 காவலர்கள் காயமுற்றனர்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட உளவாளிகளை வீரப்பன் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

வீரப்பன் ஆள்கடத்தலிலும் ஈடுபட்டுவந்தார். சுற்றுலாப் பயணிகள், காவல் அலுவலர்கள் என அவரது கடத்தல் சப்தமில்லாமல் தொடர்ந்தது. ஒருமுறை கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமாரை கடத்த அது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் கடத்தல்

இதனால் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், 100 நாள்களுக்கு மேல் வீரப்பன் காவலில் இருந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ் குமார் இரு மாநில அரசுகள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பெரும் முயற்சிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

சந்தன கடத்தல் வீரப்பன், நடிகர் ராஜ் குமாரை கடத்தவுள்ளார் என்ற தகவல் காவல் அலுவலர்களுக்கு முன்னரே தெரிந்துள்ளது. இது தொடர்பாக ராஜ் குமாருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ஆனால், இதைப் பெரிதுப்படுத்தாத நடிகர் ராஜ் குமார், “என்னிடம் சட்டையும், வேட்டியும் தவிர ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு வழக்கமான பணிகளை கவனித்ததாகவும் கூறப்படுகிறது.

பட்டுக்கூடு நடவடிக்கையில் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டாலும், அவரது சாவிலும் சில சர்ச்சைகள் எழுந்தன. வீரப்பனை கொன்று சுட்டுவிட்டார்கள் என்று கூறினார்கள். இவையெல்லாம் வீரப்பனின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்த பின்னர் ஓய்ந்தது.

குற்றச்சாட்டு

மேலும் வீரப்பன் மரணத்தில் அரசியல் தலையீடு இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. வீரப்பனுக்கு காவல்துறை போதிய வாய்ப்பு வழங்கவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வரிந்துக்கட்டினர்.

எது எப்படியோ வீரப்பனின் 36 ஆண்டுகால தனிக்காட்டு சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்த தினம் இன்று!

இதையும் படிங்க : வீரப்பனை பிடிக்க சென்று கன்னிவெடியில் சிக்கி மரணமடைந்த காவலருக்கு அஞ்சலி

Last Updated : Oct 18, 2021, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.