ETV Bharat / city

சமூக இடைவெளி காரணமாக காய்கறி மார்க்கெட் இடமாற்றம்!

author img

By

Published : Mar 28, 2020, 8:38 PM IST

ஈரோடு: சமூக இடைவெளி விடுவதற்கு போதிய இடவசதி இல்லாததால், தினசரி மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சந்தியில் குவிந்த பொதுமக்கள்
சந்தியில் குவிந்த பொதுமக்கள்

ஈரோடு நேதாஜி மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் தினசரி மார்க்கெட்டில், இட நெருக்கடி காரணமாக சமூக இடைவெளி கடைபிடிக்க போதுமான இடவசதி இல்லை. அதிகம் இடம் உள்ள பகுதிகளில் தினசரி மார்க்கெட் செயல்படுத்தும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்திற்கு தினசரி மார்க்கெட் மாற்றப்பட்டது.

இதன் மூலம் காய்கறி வியாபாரிகள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு காய்கறி கடை அமைத்துள்ளனர். இதையடுத்து, பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, வட்டத்திற்குள் நின்று வரிசையாக ஒருவருக்கு ஒருவர் சென்று காய்கறி வாங்கிச் செல்கின்றனர்.

சந்தையில் அலைமோதிய மக்கள்

மேலும், சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச்சென்று வீடு வீடாகச் சென்று விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் வெளியே வருவது குறைக்கப்படும் என்றும் காய்கறி, அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சந்தியில் குவிந்த பொதுமக்கள்
சந்தியில் குவிந்த பொதுமக்கள்

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தையில், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமால், கூட்டம் கூட்டமாக தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இதையறிந்த நகராட்சி பணியாளர்களும், காவல் துறையினரும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டமாகச் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இடைவெளி விட்டு நிற்கும் பொதுமக்கள்

இதையும் படிங்க: கொரட்டூரில் ஒருவருக்கு கரோனா அறிகுறி - அரசு மருத்துவமனையில் சிகிச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.