ETV Bharat / city

கரும்புக்கு காத்திருக்கும் யானைகள்.. இன்னைக்கு ஒரு பிடி...

தமிழ்நாடு-கர்நார்டகா எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கரும்புகள் கொட்டும் சாலையிலேயே முகாமிட்ட யானைகள் கரும்புகளை கூட்டத்துடன் வந்து ருசித்தன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 17, 2022, 1:13 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அருகே தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியிலிருந்து அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை லாரிகள் மூலமாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு, லாரிகளில் அதிக உயரத்திற்கு கரும்புகளை ஏற்றி செல்வதால் ஆசனூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் உள்ள உயர தடுப்பு கம்பியில் சிக்கிய கரும்புத் துண்டுகள் சிதறி கீழே சாலையில் விழுகின்றன. இதற்காகவே காத்திருந்த நான்கு யானைகள் இன்று (அக்.17) தங்களது குட்டிகளுடன் அங்கு முகாமிட்டு கரும்புத் துண்டுகளை ருசித்துக்கொண்டிருந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடையிடையே அந்த யானைகள், மெதுவகாக அவற்றைக் கடந்த லாரிகளிருந்தும் கரும்புத் துண்டுகளை ருசித்தன. பேருந்து மீது தும்பிக்கைப் பட்டுவிடும்.. எடுத்துக்கோ.. என்ற அரசு பேருந்து ஓட்டுநரின் சத்தத்தைக் கேட்ட யானையொன்று, சட்டென தனது தும்பிக்கையை மீண்டும் தன் வசம் இழுத்துக்கொண்டது.

ஈரோடு அருகே கையை எடுத்துக்கோ என ஓட்டுநர் கூறியதும் தும்பிக்கையை மடித்துக்கொண்ட யானை

இவ்வாறு காட்டு யானைகள் சாலையில் நிற்பதை கண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்தனர். சோதனை சாவடியில் பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானைகளை விரட்ட முயற்சித்தும், யானைகள் கரும்பு துண்டுகளை தின்பதில் ஆர்வம் காட்டியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: வீடியோ: உணவுக்காக ஹோட்டல் முன்பு காத்திருந்த ஒற்றை கடமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.