ETV Bharat / city

சாய தொழிற்சாலை கழிவுகளால் நிறம் மாறிய நிலத்தடி நீர்.. கண்டுகொள்ளுமா அரசு? - ஈரோடு அடுத்த சித்தோடு வாய்க்கால்மேடு

ஈரோடு அருகே தனியார் தொழிற்சாலைகள் வெளியேற்றும் சுத்திகரிக்காத கழிவுகளால், நிலத்தடி நீரின் நிறம் மாறி பயன்பாட்டிற்கு உதவாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவலநிலை குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகம் தகுந்த ஆய்வு நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2022, 10:05 PM IST

ஈரோடு அடுத்த சித்தோடு வாய்க்கால்மேடு பகுதியைச்சேர்ந்தவர் ராமசாமி என்பவருக்குச்சொந்தமான விவசாய நிலத்தில், விவசாயம் செய்து வந்தநிலையில் அதனை தற்போது கைவிட்டுள்ளார். காரணம், இந்நிலையில் அப்பகுதியில் செயல்படும் சாயம், சலவைத் தொழிற்சாலைகள் தான்.

விவசாயி எடுத்த முடிவு: அத்தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீரினால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயத்தைக் கைவிட்டு தனது சொந்த நிலத்தில் குடோன் அமைத்து, அதனை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு பிழைப்பு நடத்தலாம் எனத்திட்டமிட்டு வங்கியின் மூலமாக கடன் பெற்று கட்டுமானப்பணிகளை மேற்கொண்டார்.

மாசடைந்த நீரால் வந்த சோதனை: கட்டடப் பணிகளுக்காக ஆழ்துளைக்கிணறு அமைத்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கினார். இதற்காக வெள்ளை நிறத்தில் வாங்கிய ஹாலோ பிளாக் கற்கள், அப்பகுதியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து ஊற்றப்பட்ட நீரால் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கின்றன. வெள்ளை நிறத்தில் இருந்த ஹாலோ பிளாக் கட்டடச் சுவர் சாய, சலவை ஆலைக்கழிவு நீர் கலந்த தண்ணீரை நிலத்தடியில் இருந்து மோட்டார் மூலமாக தெளித்ததால் கட்டடத்தின் சுவர் முழுவதிலும் மஞ்சள்நிறமாக மாறியுள்ளது கவலையளிக்கிறது.

பயன்பாட்டிற்குக் கூட நிலத்தடி நீர் உதவாமல்போன அவலநிலையில்.. பொதுமக்கள், கால்நடைகளின் நிலை என்னவாகும்?

கிராமத்தினரும் கால்நடைகளும் அவதி: மேலும், கட்டுமானத்தேவைக்காக பேரலில் நிரப்பிய நீர் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராமசாமி கட்டடத்தின் உறுதித்தன்மையின்மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கட்டுமானப் பணியை பாதியில் நிறுத்தியுள்ளார். மேலும் அவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று நீரை மோட்டார் மூலமாக தோட்டத்திற்கு பாய்ச்சும் பொழுது கழிவுநீரின் காரணமாக நுரை பொங்க செல்வதால் விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை நடவடிக்கை தேவை: மாவட்ட நிர்வாகத்திற்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் இது தொடர்பாக புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்; இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பு மற்றும் அரசுப்பள்ளிகள் இருப்பதால் இங்கு செயல்பட்டு வரும் சாய, சலவை ஆலைக் கழிவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதியினரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

விதிமுறை மீறலில் தனியார் தொழிற்சாலைகள்: முன்னதாக சாய, சலவை, தோல் தொழிற்சாலைகள் பூஜ்ஜியம் முறையில் ஆலைக்கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யவும், அதனை முறையாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் சாய, சலவை தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நிலத்தடியில் வெளியேற்றியதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கிராமத்தில் குடிப்பதற்கும் பயன்பாட்டிற்கும் உதவாமல்போன மாசடைந்த நிலத்தடி நீர் குறித்து அரசு கவனம் செலுத்துமா?

இதையும் படிங்க: தேனி அருகே நூற்றாண்டு காணும் அரசு தொடக்கப்பள்ளி.. கல்வி சீர்வரிசை வழங்கி கிராம மக்கள்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.