ETV Bharat / city

'புறம்போக்கில் உள்ள வீடுகளை காலி செய்ய வலியுறுத்தினால் போராடுவேன்' - திருப்பூர் எம்.பி., தடாலடி ! - Tirppur MP Subburayan Visiting to Kheel Bahavani Houses

ஈரோடு:  கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் 78 வீடுகள் கட்டியிருப்பதாகக் கூறி வீடுகளை உடனடியாக காலிசெய்யவேண்டும் என பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வீட்டை காலி செய்ய வலியுறுத்தினால் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக  திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 15, 2019, 3:53 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் கேன்குழி பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். அவர்களது வீடுகளுக்கு மின் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள 78 வீடுகள் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் உள்ளதாகக்கூறி, அந்த வீடுகளை காலிசெய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையினர் சார்பில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக தாங்கள் இங்கு வீடுகள் கட்டி வசித்து வருவதாகவும், தற்போது கீழ்பவானி வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் இடம் வாய்க்காலுக்கு பாதிப்பில்லாமல் உள்ளது.

இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் வாய்க்காலை விட்டு 100 அடிக்கும் மேல் உள்ளது. அதனால் இவ்விடத்தில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் என வருவாய்த்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் இப்பகுதியை நேரில் பார்வையிட்டார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் பார்வையிட்டபோது

பின்னர் வீடுகள் குறித்து திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் கூறுகையில்,’வீடுகள் உள்ள இடத்திற்கும், வாய்க்கால் உள்ள இடத்திற்கும் இடைபட்ட தொலைவுகளை கணக்கிட்டு பார்த்ததில், இவ்விடத்தை இப்பகுதி பொதுமக்களுக்கு வழங்குவதில் அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் எதற்காக வீடுகளை காலி செய்யச்சொல்லி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் எனத்தெரிய வில்லை. இது போன்ற செயல்கள் அரசு பொதுமக்கள் மீது விரோதப்போக்கை காட்டுவதாக உள்ளது’ என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இப்பகுதி பொதுமக்களை காலி செய்யச் சொல்லி பொதுப்பணித்துறையினர் வற்புறுத்தினால், அதே இடத்தில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுப்புராயன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்து; உயிருக்குப் போராடும் மாணவி!

Intro:Body:tn_erd_04_sathy_tirupur_mp_oppo_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் 78 வீடுகள் கட்டியிருப்பதாக்கூறி வீடுகளை உடனடியாக காலிசெய்யவேண்டும் என பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளதையடுத்து அப்பகுதியை பார்வையிட்ட திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் வீட்டை காலி செய்ய வலியுறுத்தினால் இவ்விடத்திலேயே படுத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் கேன்குழி பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் புறம்போக்கில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்களது வீடுகளுக்கு மின் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற்றுள்ளனர். இந்நிலையில் அதில் 78 வீடுகள் கீழ்பவானி வாய்கால் புறம்போக்கில் உள்ளதாகக்கூறி புறம்போக்கில் உள்ள வீடுகளை காலிசெய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையினர் சார்பில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டிச்சென்றுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அவ்வீடுகளில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக இங்கு வீடுகள் கட்டி வசித்துவருவதாகவும் தற்போது கீழ்பாவனி வாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படப்பட்டதாகக்கூறப்படும் இடம் வாக்காலுக்கு பாதிப்பில்லாமல் உள்ளதாகவும் கீழ்பவானி வாய்க்காலை விட்டு 100 அடிக்கும் மேல் தான் வீடுகள் உள்ளதாகவும் அதனால் இவ்விடத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றி குடியிருப்பவர்களுக்கே வீட்டு மனைப்பட்டா வழங்கவேண்டும் என வருவாய்துறைக்கும் பொதுப்பணித்துறைக்கும் மனு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் அப்பகுதியை நேரில் பார்வையிட்ட திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் வீடுகள் உள்ள இடத்திற்கும் வாய்கால் உள்ள இடத்திற்கும் தூரங்களை கணக்கிட்டு இவ்விடத்தை இப்பகுதி மக்களுக்கு வழங்குவதில் அரசுக்கு எந்தத்தடையும் இல்லை என்றும் எதனால் வீடுகளை காலி செய்யச்சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் இது மக்கள் விரோப்போக்கை காட்டுவதாக அமைகிறது என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து இப்பகுதி மக்களை காலி செய்யச்சொல்லி பொதுப்பணித்துறையினர் வற்புறுத்தினால் இதே இடத்தில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.