ETV Bharat / city

'சாதி பாராமல் தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது' - கமல்ஹாசன்!

ஈரோடு: சாதி பாராமல் ஓட்டு போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

author img

By

Published : Jan 12, 2021, 9:55 PM IST

kamal haasan
kamal haasan

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பின் கீழ் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஜனவரி 12) பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஒவ்வொரு நகரத்தையும், தலைநகரத்தை விட சிறப்பாக மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் செயல்படும். எங்களது பலம் எங்களது நேர்மை. 50 ஆண்டுகாலமாக கொள்கைகளை படித்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சாதி பாராமல் ஓட்டு போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழிலுக்கு தேவையான உள்கட்டமைப்பு அமைக்கப்படும். விவசாயம் சார்ந்த தொழிற்சாலைக்கு திட்டமிடப்படும். விவசாயிகளுக்கு தேவையான மானியம் வழங்கப்படும். விவசாயி என்ற பட்டம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்படும்.

மக்கள் நீதி மய்யம் வழங்கும் வீட்டிற்கு ஒரு கணினி என்பது அடிப்படை உரிமை. விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை, சமமான ஊதியம் வழங்க உழைப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சம உரிமை': கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.