ஈரோடு மாவட்டதில் கரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் உழவன் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்கள், சானிடைசர், மாஸ்க், முழு உடல் பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி, ரூ.1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆனந்த்திடம் வழங்கினார்.
பின்னர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமி 350 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச அரிசி பைகளை வழங்கினார்.