ETV Bharat / city

ஆம்புலன்ஸ் அதிக வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் சு.முத்துசாமி

author img

By

Published : May 25, 2021, 7:06 PM IST

ஈரோடு: ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு உரிய கட்டணத்தை அரசு அறிவுறுத்திய நிலையில், அதிக வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ்கள் அதிக வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை என வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,

'ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா குறித்த ஆலோசனைகளை வழங்க 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ நிபுணர், மனநல மருத்துவர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் பயன்பெற வேண்டி மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் இணைப்புப் படுக்கைகள்

தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் சற்று குறைவாகவே உள்ளன. அதனை அதிகரிக்க, ஈரோடு அரசு மருத்துவமனையில், 131 ஆக்ஸிஜன் இணைப்பு படுக்கைகள் இருந்த நிலையில், அதனை 250ஆக அதிகரித்துள்ளோம். இரண்டு நாட்களில் அவை பயன்பாட்டுக்கு வரும்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகளை 650 ஆக்ஸிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளாக அதிகப்படுத்தி உள்ளோம். அவ்வளாகத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட 300 ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் வரும் வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வரும்' என்றும் தெரிவித்தார்.

பக்கத்து மாவட்டங்களுக்கும் முன்னுரிமை

மேலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் உள்ள நோயாளிகளும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைப் பெற வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஒரு வாரத்தில் 300 ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள், பயன்பாட்டுக்கு வரும். ஜூன் 20க்குள் மேலும் 200 ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம் ஆயிரத்து 550 படுக்கை வசதிகள், பெருந்துறையில் இருக்கும்.

ஆக்ஸிஜன் தேவைப்படாமல், கரோனாவுக்காக சிகிச்சைப் பெற, 3 ஆயிரத்து 500 படுக்கைகள் பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஆயிரம் படுக்கைகள் தவிர மற்றவை காலியாக உள்ளன. வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இல்லாதவர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் அங்கு சிகிச்சையில் உள்ளனர். அதுபோல, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி அரசு மருத்துவமனைகளில், தலா 100 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தரம் உயர்கிறது.

இருப்பினும், அங்கு குறிப்பிட்ட படுக்கைகளில் மட்டும் கரோனா நோயாளிகள் தங்க வைக்கப்படுவர். மற்ற படுக்கைகள், பிற கட்டடங்கள், பிற நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி, சிகிச்சை தொடரும் என்று கூறினார்.

மேலும் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபடுவதற்கு ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றும்; ஆசிரியர்களை ஆய்வுப் பணிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் மிகக்குறுகிய இந்தக்காலத்தில் துரிதமாகப் பணியாற்றி வருகிறோம் என்றும்; தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கவனத்திற்கு

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அளப்பரிய சேவையை செய்து வருகின்றனர் என்றும்; ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு உரிய கட்டணத்தை அரசு அறிவுறுத்திய நிலையில், அதிக வாடகை வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகள் திறப்பு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.