ETV Bharat / city

கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக கழித்த மாணவர்கள்!

ஈரோடு: கோடை விடுமுறையில் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு பயிற்சிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

author img

By

Published : May 1, 2019, 2:35 PM IST

silambam training in sathyamangalam

சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி வளாகத்தில் கோடைக்கால சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றிய இச்சிலம்பாட்டம் பயிற்சியில் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்குச் சிலம்பாட்ட பயிற்சியாளர் பொன்னுசாமி, சிலம்பாட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார். அதைத் தொடர்ந்து, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தற்காப்புக் கலையில் உள்ள நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. மாணவர்களுக்குத் தீப்பந்தம், நெடுங்கம்பு, புலி ஆட்டம், சுருள் கம்பி, சிறுத்தா, பிச்சுவா, மான்கொம்பு போன்ற பாரம்பரிய வீரவிளையாட்டுகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறையில் பாரம்பரிய கலைப் பயிற்சி

பயிற்சி பெற்ற மாணவர்கள், நிறைவு நாளான இன்று, தாங்கள் கற்ற கலையை செயல் விளக்கமாகப் பெற்றோர்கள், பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். குழந்தைகளின் இச்சாகச விளையாட்டுகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தைக் குழந்தைகளுக்கு கற்று வருவதைப் பெருமையாக கருதுவதாகவும், கோடை விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து பொழுதுபோக்கும் இளைஞர்கள் மத்தியில், உடலும், மனமும் வலிமை பெறக் குழந்தைகள் பாரம்பரிய சிலம்பாட்டம் பயிற்சி பெற்றது பெருமைக்குரியதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

கோடை விடுமுறையில் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம் பயிற்சி: பெற்றோர் ஆர்வம் 

தீப்பந்தம், நடுங்கம்பு, புலி ஆட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்

TN_ERD_SATHY_05_01_SILAMBAM_VIS_TN10009
(Visual  MOJO இல் உள்ளது)

கோடை விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து பொழுபோக்கும் இளைஞர்கள் மத்தியில் உடல் மற்றும் மன வலிமை பெற குழந்தைகள் பாரம்பரிய சிலம்பாட்டம் பயிற்சி பெற்றது பெருமைக்குரியதாக பெற்றோர் தெரிவித்தனர். சத்தியமங்கலத்தில் நடந்த சிலம்பாட்ட நிறைவு விழாவில் தீப்பந்தம், நடுங்கம்பு, புலி ஆட்டம் ஆடி மாணவர்கள் அசத்தினர்.

சத்தியமங்கலம் நகராட்சி பள்ளி வளாகத்தில் கோடைகால சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. கோடைவிடுமுறையை பயனுள்ளதாகவும் மாணவர்கள் பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த சிலம்பாட்டம் பயிற்சியில் 3 வயது குழந்தை முதல் 16 வயதுள்ள மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சியாளர் பொன்னுச்சாமி சிலம்பாட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களை கற்றுத்தந்தார். அதைத் தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.மாணவர்களுக்கு தீப்பந்தம், நடுங்கம்பு, புலி ஆட்டம், சுருள்கம்பி, சிறுத்தா, பிச்சுவா, மான்கொம்பு போன்ற பாரம்பரிய வீரவிளையாட்டுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்கள் நிறைவுநாளான இன்று தாங்கள் கற்ற கலையை செயல்விளக்கமாக பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். குழந்தைகளின் சாகச விளையாட்டுகள் காண்போரை மெய்சிலிக்க வைத்தது. கம்பை பிடித்து சுற்றும்போதும் தற்காப்பு கலை பயிற்சிக்கு அவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. குழந்தைகள் தீப்பந்தம் பிடித்து சுற்றும்காட்சி உணர்ச்சிபூர்வமாக இருந்தது. இந்த போட்டையில் வெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை குழந்தைகளுக்கு கற்று வருவதை பெருமையாக கருதுவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.