புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே கிழ்காத்தி கிராமத்தில் தெற்கு வெள்ளாற்று பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் அள்ளுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ரவிசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகுமார், தனிப்பிரிவு காவலர் பாலசுப்பிரமணி, காவலர்கள் சிவராஜன், மனோகரன், மெய்யப்பன் ஆகியோர் கொண்ட காவல் துறை தனிக் குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கிழ்காத்தி தெற்கு வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 18 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.