ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்தக் கட்டங்களில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன.
30 ஆண்டுகாலமாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டுவந்த நீதிமன்றத்தை அரசு நிலத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், முதலில் மலையடிப்புதூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடம் அதிக தொலைவில் உள்ளதால் வேறு இடம் தேடப்பட்டுவந்தது.
இந்த நிலையில், சத்தியமங்கலம் கோபி சாலையில் அரசு பொது மருத்துவ மருத்துவமனை அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டங்கள் கட்டுவதற்கு அரசு புறம்போக்கு 2 ஏக்கரும், நீதிமன்ற குடியிருப்புகளுக்கு தவளகிரி முருகன் கோயில் எதிரில் 4.96 ஏக்கரும் தேர்வு செய்யப்பட்டது. அதனை இன்று மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுமதி, சத்தியமங்கலம்சார்பு நீதிபதி ஈஸ்வர மூர்த்தி, வட்டாட்சியர் ரவிசங்கர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: கனிமவள கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா: மாவட்ட ஆட்சியர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்