கோடைக் காலம் வாட்டி வதைத்கும் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தை குறைக்க மக்கள் நீர்நிலைகள் தேடி ஆனந்த குளித்து மகிழ்கின்றனர். வாகன ஓட்டிகள் நுங்கு, இளைநீர் வாங்கி பருகுகின்றனர். தற்போது சாலையோரங்களில் பனைநுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. வெயிலில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள கடைகளில் நுங்கு வாங்கி சாப்பிடுகின்றனர்.
தற்போது 10 ரூபாய்க்கு 2 நுங்குகள் விற்கப்படுகின்றன. பனைமரங்களில் இருந்து பறித்து நேரடியாக பொதுமக்கள் முன்னிலையில் நுங்கு சீவி விற்கப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். பனை மரங்கள் குறைந்துவிட்டதால் தோட்டங்களில் அதிகவிலை கொடுத்து வாங்குவதாகவும், அதனால் நுங்கு விலையை ஏற்ற வேண்டியுள்ளதாகவும், குறைந்த பட்சமாக ஒருவர் ரூ.50 வரை வாங்குவதாகவும், ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் வரை வருவாய் கிடைப்பதாகவும் நுங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் பணப்பையும்... கவ்விச் சென்ற வளர்ப்பு நாயும்...