ஈரோடு: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே செல்ல அரசு அனுமதியளித்துள்ளது. முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்களை கட்டுப்படுத்த சத்தியமங்கலம் புதிய பாலம், வடக்குப் பேட்டை, ரங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் காவல் துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
அலுவலக பணி மற்றும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு காவல் துறையினர் அனுமதித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழ்நாடு- கர்நாடக இடையே பயணிக்கும் சரக்கு வாகன ஓட்டுநர்கள் முகக்கவசம் அணியாமல் பயணித்தனர்.
முகக்கவசம் இல்லாத சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு முக்ககவம் வழங்கி காவல் துறையினர் அறிவுரை வழங்கினர். முகக்கவசம் இன்றி பயணித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு, காவல் துறையினர் முகக்கசங்களை இலவசமாக வழங்கினர்.
முழு ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் மைசூர் சாலை, கடைவீதி மற்றும் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: நாட்டில் அதிகரிக்கும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 3,33,000க்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புகள்