ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வி.கே. சசிகலா, சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். கோயிலில் சாமி தரிசனம் முடித்துக்கொண்ட வி. கே. சசிகலா பண்ணாரி அம்மன் கோயில் அருகே சத்தியமங்கலம் மைசூரு தேசிய நெடுஞ்சாலையோர வனப்பகுதியில் காரில் இருந்தபடியே உணவருந்தினார்.
அப்போது உணவு அருந்தி முடித்த பின் சசிகலாவை காண்பதற்காக வந்த பொதுமக்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் அவருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலையில் சசிகலா காரில் இருந்தபடியே பொதுமக்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டார்.
சாலையின் நடுவே சிறிது நேரம் கார்கள் நின்றிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வி.கே.சசிகலா திருப்பூர் மாவட்டம் அவினாசி செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க:சுதாகரன் மீது போடப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெற்ற நீதிமன்றம்