ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. சத்தியமங்கலம் எஸ் ஆர் டி மைதானத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை சத்தியமங்கலம் சார்பு நீதிபதி ஈஸ்வரமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் சாலை விதிகளைப் பின்பற்றி இயக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணியில் கலந்துகொண்டன.
இதில் பள்ளி மாணவ மாணவியர் வணிகர்கள் தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பேரணியானது எஸ்ஆர்டி மைதானத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சென்று முடிவடைந்தது.
அதேபோல் திருவாரூரிலும் மாவட்ட காவல்துறை மற்றும் இருசக்கர பழுது பார்ப்போர் நலச் சங்கம் இணைந்து 31ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டிகளின் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்திய வாகன பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் சாலை விதிகள் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பேரணியானது திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கடைவீதி மற்றும் நான்கு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
இதையும் படிங்க: