ஈரோடு: தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது.
இக்கோயிலில் மழை வேண்டி தெப்ப திருவிழா நேற்று(அக்.16) நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ ரங்கசாமி -மல்லிகார்ஜுனா சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தன.
ஸ்ரீ ரங்சாமி, மல்லிகார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் வைக்கபட்டு, திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு தெப்ப குளத்தை சென்றடைந்தது.
கொட்டும் மழையில் குளத்தின் நடுப்பகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அந்தக் குளத்தின் நீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கபட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தனர்.
குளத்தின் கரையில் பக்தர்கள் கொட்டும் மழையில் நின்று தெப்ப திருவிழாவை கொண்டாடினர். மேலும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்துவரபட்டது. பின்னர் பக்தர்கள் தேங்காய் உடைத்தும் சாமிக்கு பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் உள்வாங்கிய கடல்!