ETV Bharat / city

மீண்டும் பசுமைக்கு திரும்பும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்!

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால் பச்சைப் பசேலென அழகாக வனப்பகுதி காட்சியளிக்கிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நீங்கியது!
author img

By

Published : Jun 9, 2019, 7:31 PM IST

தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். இதில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த நான்கு மாதகாலமாக மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு தண்ணீர் இன்றி மரங்கள், செடிகொடிகள் என அனைத்தும் காய்ந்து போயின.

இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தீவனம், குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வறட்சி நீங்கியது!

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்ததால் காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. துளிர்விடும் இலை, தழைகளை யானைகள், மான்கள் ஆசனூர் சாலையோரம் முகாமிட்டு சாப்பிடுகின்றன. மழை காரணமாக வனவிலங்களுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியாகியுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்மழை காரணமாக பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி 
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_02_09_SATHY_FOREST_GREEN_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

தொடர்மழை காரணமாக பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தொடர்மழை பெய்ததால் வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. யானைகள், மான்கள் துளிர்விடும் இலை தழைகளை சாப்பிட சாலையோரம் முகாமிட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. கடந்த 4 மாதகாலமாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ள மரங்கள், செடிகொடிகள் காய்ந்து கிடந்தன.  இதன்காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள், தீவனம், குடிநீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மழை பெய்ததால் காய்ந்து கிடந்த மரங்கள் துளிர்விட்டு வனப்பகுதி பச்சைப்பசேலென அழகாக காட்சியளிக்கிறது. துளிர்விடும் இலை, தழைகளை யானைகள், மான்கள் ஆசனூர் சாலையோரம் முகாமிட்டு சாப்பிடுகின்றன. மழை காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் தேவை தற்காலிகமாக பூர்த்தியாகியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள வனச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வனத்தின் அழகு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.