ETV Bharat / city

டெல்லி தாக்குதலைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்! - Delhi Violance, Erode Protest

ஈரோடு: டெல்லி தாக்குதலைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Erode,etvbharat  டெல்லி வன்முறை, ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்  குடியுரிமை திருத்தச் சட்டம்  Delhi Violance, Erode Protest  Protests in Erode condemning Delhi attack

author img

By

Published : Feb 27, 2020, 7:42 AM IST

டெல்லி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ.,மக்கள் சிவில் உரிமைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லியில் நடைபெற்ற தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் தாக்குதலுக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியதோடு தாக்குதலை தடுக்கத் தவறிய டெல்லி காவல் துறைக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

டெல்லி தாக்குதலைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!

டெல்லி கலவரத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 2012 ஏப்ரல் 31ஆம் தேதிக்கு முன்னர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு எளிதில் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது.

இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம்: கடையநல்லூரில் 6 வழக்குகள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.