ETV Bharat / city

தண்ணீர் பிடிப்பதில் தகராறு; நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய 4 வடமாநிலத்தவர்கள் மீது வழக்கு பதிவு

பெருந்துறை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கியதாக 4 வடமாநிலத்தவர் மீது போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லோகநாதன்
லோகநாதன், தாக்குதலுக்குள்ளான நாம் தமிழர் நிர்வாகி
author img

By

Published : Jun 25, 2022, 4:49 PM IST

ஈரோடு: மாவட்டம் பெருந்துறை அருகே ஈங்கூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் நாம் தமிழர் கட்சியில் பெருந்துறை தொகுதி செயலாளராக உள்ளார். இன்று (ஜூன்25) காலை பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் லோகநாதனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வடமாநிலத்தவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையின்போது, லோகநாதனை வடமாநிலத்தவர்கள் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லோகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், லோகநாதனை தாக்கிய வடமாநிலத்தவர்களை கைது செய்ய கோரி சென்னிமலை-பெருந்துறை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தண்ணீர் பிடிப்பதில் தகராறு; நாம் தமிழர் நிர்வாகியை தாக்கிய 4 வடமாநிலத்தவர்கள்

இதையும் படிங்க: கூட இருந்தவர்களே குழி பறித்துவிட்டார்கள் - உத்தவ் தாக்ரே வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.