ஈரோடு: செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ், சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு வறுமை, மது, போதை, சூது போன்றவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை என்றார்.
நாளை (ஆக.15) சுதந்திர தினத்தில் பல அறிவிப்புகளை அறிவிக்கவேண்டும். அதில், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வர செயல்திட்டம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்கின்றோம் என்ற அறிவிப்பு, போதை பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்பனவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டுமமெனவும் இதையே மக்களும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இவற்றை அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டம் தடை கொண்டு வந்த பிறகு, ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் தடை நீக்கிய பிறகு ஒராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
காவல்துறை நினைத்தால் போதைப்பொருட்களை தடுக்கலாம் என்றும் விற்பவர்கள் யார் என காவல்துறைக்கு தெரியும் என்ற அன்புமணிராமதாஸ் போதை பொருட்களை விற்பவர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின்கீழ் கைது செய்யவேண்டும் என்றும் போதை பொருட்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மதுவை விற்ற தான் ஆட்சியை நடத்துனமா? இதைவிட கேவலம் எதுவுமில்லை; இது வெட்கக்கேடு என்றார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும். அதறகேற்ற யூகங்களை 2024-ல் அமைப்போம் என்றார். தொடர்ந்து மேலும், தமிழக நிதி அமைச்சர் மீது செருப்பு வீசியது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், தமிழகத்தில் இதுபோன்று நடந்தது கிடையாது என்றார்.
இதையும் படிங்க: டாக்டர் சரவணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அண்ணாமலை