ETV Bharat / city

பாறுக் கழுகுகளைப் பாதுகாக்க ஈரோட்டில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோட்டில் பாறுக் கழுகுகளின் பாதுகாப்பு குறித்து மருந்துகடை விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 17, 2022, 3:03 PM IST

ஈரோடு: அழிந்து வரும் பாறுக் கழுகுகளை பாதுகாப்பதற்கும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்களுக்கு சிறப்பு முகாம் ஈரோட்டில் நடைபெற்றது.

இந்த முகாமை சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குநர் கிருபா சங்கர் மற்றும் பவானிசாகர் வனச்சரகர் சிவகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 40 மருந்து விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.

உயிரிழந்த கால்நடைகள், காட்டு விலங்குகளை உண்டு உயிர் வாழும் மூன்று வகையான பாறுக் கழுகுகள் (வெண் முதுகுப் பாறுக் கழுகு (White-backed vulture), கருங்கழுத்துப் பாறுக் கழுகு (Long-billed vulture), செம்முகப் பாறுக் கழுகு (Red headed vulture)) சத்தியமங்களம் புலிகள் காப்பகத்தில் காணப்படுகின்றன.

அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் நகரத்திற்கு அருகில் உள்ள புதுவடவள்ளி மற்றும் டி.என்.பாளையத்திலும் அண்மையில் தென்பட்டுள்ளன. இவற்றின் எண்ணிக்கை உயர்ந்து வருவது பல்லூயிர் பெருக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதனிடையே உயிரிழந்த கால்நடைகளை உண்ணும் பாறு கழுகுகள் உயிரிழந்துள்ளன.

அதுகுறித்த ஆராய்ச்சிகளில் அந்த கால்நடைகளுக்கு வலிபோக்கி மருந்துகளான (டைக்குளோபினாக் (diclofenac), கீட்டோபுரோபேன் (ketoprofen), அசிக்குளோபினாக் (Aceclofenac), புளுநிக்சின் (Flunixin) உள்ளிட்ட மருந்துகள் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கால்நடை உரிமையாளர்கள் தாமகவே இந்த மருந்துகளை வாங்கி கால்நடைகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். ஆகவே மருத்துவரின் சீட்டு இல்லாமல் இதுபோன்ற மருந்துகளை உரிமையாளர்களுக்கு தரக்கூடாது, அதோடு தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட எட்டு ‘சீட்டா’ சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.