ஈரோடு: கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்படுவது வழக்கம். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடுவர்.
அந்த வகையில், ஈரோட்டில் வாழும் கேரள மக்கள் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர். வண்ண மலர்களை கொண்டு கேரள பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். இதில் பாரம்பரிய நடனம். மகாபலி அரசன் வரவேற்பு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு