ETV Bharat / city

டிராக்டரில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், மகளும் உயிரிழந்த சோகம் - ஆவராங்காட்டு வலசு அருகே டிராக்டரில் சிக்கி தாயும் 4வயது மகளும் உயிரிழப்பு

ஈரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும் மகளும் டிராக்டர் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 பேர் பலி
2 பேர் பலி
author img

By

Published : Jun 13, 2022, 12:16 PM IST

ஈரோடு: மொடக்குறிச்சி அடுத்த சேமூரை சேர்ந்தவர் ரவிக்குமார்-கோமதி தம்பதி். கோமதி தனது 4 வயது மகளுடன் மொடக்குறிச்சியிலுள்ள தாயார் வீட்டுக்கு நேற்று (ஜூன் 12) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆவராங்காட்டு வலசில் முன்னாடி சென்ற டிராக்டர் ஒன்றை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் ஒன்றின்மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால், அருகே வந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கி கோமதியும் அவரது மகள் சுகுதியும் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மொடக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 வயதில் நோபல் புக் ஆப் ரெகார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஆட்சியரின் மகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.