இது தொடர்பாக அவர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ”கரோனா பேரிடர் குறித்து உதவி ஆணையர், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை தணிக்கைத்துறைக்கு, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் கடிதம் எழுதியிருந்தேன். அக்கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது போன்றவை குறித்து கேட்டிருந்தேன்.
அதற்கு அத்துறை தரப்பில் வந்த பதில் கடிதத்தில், நிதிநிலை குறித்த தகவல்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்திருந்தனர். ஆனால் ஆர்டிஐ சட்டப்படி இதுபோன்று பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு சொல்லக்கூடாது என நான் மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த பதில் கடிதத்தில், கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு குடிநீர், உணவு, தங்குமிடம் ஆகியவற்றிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு, 6,367 ரூபாய் தரவேண்டும் என்ற உத்தரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன்படி யாருக்கும் ஒதுக்கப்பட்டு செலவிடப்படுவதில்லை.
எனவே, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அரசு, இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதும், கேள்வி கேட்டால் முரண்பாடான தகவல்கள் அளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் சில இடங்களில் சானிடைசர் 50 ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 350 ரூபாய்க்கு வாங்கியதாக கணக்கு தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. பட்டியல் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இது தொடர்பாக அலுவலர்கள் மீது பொதுநல வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருவேன் ” என்றார்.
இதையும் படிங்க: கொடுமுடி கோயில் முறைகேடு - ஆட்சியரிடம் பாஜக மனு!