ETV Bharat / city

ஈரோட்டில் வீடு தேடி வரும் கரோனா பரிசோதனை வாகனம் அறிமுகம்! - கரோனா பரிசோதனை வாகனம்

ஈரோடு மாநகர் பகுதியில் நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தைக் கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கிவைத்தார்.

நடமாடும் மருத்துவமனை
Mobile dispensary
author img

By

Published : Apr 26, 2021, 3:30 PM IST

ஈரோடு மாவட்ட மாநகராட்சி அலுவலகத்தில், இன்று (ஏப்.26) நடமாடும் கரோனா பரிசோதனை (mobile dispensary) வாகனத்தைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கதிரவன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏழு நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் இளம் மருத்துவர்கள் தேசிய தலைவர் அபுல் ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநகர் பகுதியில் தொற்று அதிகமாக பரவி வருகிறது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கூடுதல் பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் 672 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் குறித்து சுகாதாரத் துறையினர் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர். இதில் மாநகர் பகுதியில் எந்த இடங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த இடங்களுக்கு இந்த நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் செல்லும். அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும்.

சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். முடிவு வரும்வரை அந்த நபர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முடிவில் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் கண்காணிப்பு மையத்துக்கு(ஸ்கிரீனிங் சென்டர்) அழைத்துச் செல்லப்படுவார். அதில் முழு உடல் பரிசோதனை செய்து, அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாமா என்று முடிவு செய்யப்படும்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆதார் கார்டை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இன்று(ஏப்.26) தனியார் பங்களிப்புடன் 3 வாகனங்களும், அரசு உதவியுடன் 4 வாகனங்கள் என ஏழு வாகனங்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. இந்த நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பர்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.